Skip to main content

Homeschooling In Tamil/பள்ளிக் கல்வி முறை சிறந்ததா? அல்லது வீட்டு கல்வி முறை சிறந்ததா?


வணக்கம்,  

பெற்றோர்களாகிய நாம் வீட்டுகல்வி முறையை பின்பற்ற பல வழிகள் உள்ளன.

பெரும்பாலான பெற்றோருக்கு வீட்டு கல்விமுறையின் நன்மைகள் பற்றி அறியாமல் உள்ளனர்.

ஒரு குழந்தையை நாம் வீட்டு கல்வி மூலம்
பாடங்களை கற்பிக்கும் போது அவர்கள் மிகவும் வேகமாக தெளிவாகவும் அவர்களின் பாடங்களை எளிதாக கற்க முடியும். இதற்கு பல காரணங்கள் உள்ளன!

 

நாம் ஒரு விஷயத்தை சுதந்திரமாக செய்யும் பொழுது அதை
நிதானமாகவும் எளிதாகவும் செய்ய முடியும். அதே போல தான் சுதந்திரமாக குழந்தைகள் பாடங்களை அவர்களாகவே கற்கும் பொழுது அவர்கள் மிகவும் வேகமாகவும் சுதந்திரமாகவும் எளிதாகவும் அதைவிட மிக ஆர்வமாகவும் தங்கள் பாடங்களை கற்றுக் கொள்வார்கள்.

எதில் சுதந்திரம் இருக்கிறதோ இல்லையோ கல்விமுறையில் கண்டிப்பாக குழந்தைகளுக்கு சுதந்திரம் தேவை.
குழந்தைகள் தாங்கள் விரும்பும் பாடங்களை அவர்கள் விரும்பும் நேரத்தில்
கற்றுக்கொள்ள வீட்டு கல்வி முறை ஒரு சிறந்த முறையாகும்.

சில குழந்தைகள் தமிழிலும், சில குழந்தைகள் ஆங்கிலத்திலும், சில குழந்தைகள் அறிவியலிலும், சில குழந்தைகள் கணிதத்திலும், கெட்டிக்காரர்களாக இருப்பார்கள்.
குழந்தைகள் எந்த பாடங்களில் எந்த ஆக்டிவிட்டியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள் என்று கண்டறிய வீட்டு கல்வி முறை நமக்கு வழிவகுக்கிறது.

குழந்தைகள் அவர்கள் விரும்பும் வண்ணம் ஆக்டிவிட்டி முறையிலோ அல்லது ஒருசில கரிக்குலம், சிலபஸ் முறையிலோ அவர்களுக்கு நாம் எளிமையாக சொல்லிக் கொடுக்க முடியும்.


எப்படி இருந்தாலும் குழந்தைகள் விரும்பும் வண்ணம் நாம் எவற்றை கற்றுக் கொடுத்தாலும் அவர்கள் எளிதாகவும்
மிக ஆர்வத்துடனும் கற்றுக் கொள்வார்கள்.

குழந்தைகள் தாங்கள் சுதந்திரமாக அவர்களின் சந்தேகங்களை தங்கள் பெற்றோரிடம் கேட்டு அறிந்து கொள்ள வீட்டு கல்வி முறை உதவுகிறது.

அதுமட்டுமல்ல குழந்தைகள் தாங்கள் மிகவும் நிதானமாக தங்களின் பாடங்களை கற்றுக் கொள்ள வீட்டு கல்வி முறை சிறந்த வழியாகும். 

 

*ஏனென்றால் அவர்களின் அட்டவணையை அவர்களே தயார் செய்து கொள்ளலாம். 

*தாங்கள் விரும்பும் பாடங்களை தாங்கள் விரும்பும் நேரத்தில் கற்றுக் கொள்ளலாம்.

*தங்களுக்கு வரும் சந்தேகங்களை எளிதாகவும் சுதந்திரமாகவும் தங்களின் பெற்றோரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

 இது போன்ற பல நன்மைகள் வீட்டு கல்வி முறையில் குழந்தைகளுக்கு கிடைக்கின்றன.

ஒரு குழந்தையை எப்படி வீட்டிலேயே வைத்து கற்றுக்கொடுப்பது என்ற கேள்வி போய் இப்போது அனைத்துக் குழந்தைகளும் வீட்டில் இருந்துதான் தங்கள் பாடங்களை பள்ளிக் கல்வி முறையிலும் கற்கிறார்கள்.

இப்போதெல்லாம் மாறி வரும் சமுதாயத்திற்கு ஏற்றவாறு நாம் மாற்றிக் கொண்டுதான் நம் பாதையில் கடந்து செல்கிறோம். அதனால் வீட்டு கல்வி முறையும் ஒரு அழகான மாற்றமே!

பள்ளிக் கல்வி முறை சிறந்ததா?
அல்லது வீட்டு கல்வி முறை சிறந்ததா?
என்று கேட்டால் குழந்தைகள் சுதந்திரமாக எல்லாவற்றையும் கற்கும் முறையே சிறந்தது என்று தான் கூறமுடியும்.

மேலும் வீட்டுக் கல்வியின் பல சிறந்த கருத்துக்களுடன் அடுத்த பதிவில் உங்களை சந்திக்கிறேன்.

 

வீட்டுக்கல்விமுறை(Homeschooling) பற்றி மேலும் அறிய 

Click Here 👉👉வீட்டுக்கல்வி/ Homeschooling

 

உங்கள்,

 ஐலின்

 

Comments

Popular posts from this blog

வீட்டுக்கல்வி/ HOMESCHOOLING IN TAMIL

 வணக்கம்  வீட்டுக்கல்வி (Homeschooling) பற்றிய கருத்துக்கள் பல உள்ளன.                          * முதலில்  வீட்டுக்கல்வி (Homeschooling)  என்றால் என்ன ? * 1970 களில் ஜான் ஹோல்ட் மற்றும் டோரதி மற்றும் ரேமண்ட் மூர் போன்ற சில பிரபல எழுத்தாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கல்வி சீர்திருத்தம் பற்றி எழுதத் தொடங்கியபோது வீட்டுக்கல்வி (Homeschooling) இயக்கம் வளரத் தொடங்கியது. வீட்டுக்கல்வியை மாற்று கல்வி விருப்பமாக அவர்கள் பரிந்துரைத்தனர்.  தேசிய வீட்டுகல்வி (Homeschooling) ஆராய்ச்சி நிறுவனத்தின் கூற்றுப்படி, இப்போது அமெரிக்காவில் 2 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் வீட்டுப்பள்ளியில் படிக்கப்படுகிறார்கள், ஒவ்வொரு ஆண்டும் சதவீதம் வேகமாக அதிகரித்து வருகிறது. அனைத்து 50 மாநிலங்களிலும் மற்றும் பல வெளிநாடுகளிலும் வீட்டுக்கல்வி சட்டப்பூர்வமானது. * வீட்டுக்கல்வியின் நன்மைகள் என்ன?* ஒவ்வொரு குடும்பமும் வித்தியாசமாக இருப்பதால், வீட்டுக்கல்விக்கான அனைத்து முடிவுகளையும் ஒரு கட்டுரை சாத்தியமாக்க முடியாது. இதுவரை, வீட்...

டிஜிட்டல் மார்க்கெட்டிங்/ DIGITAL MARKETING IN TAMIL

வணக்கம் இப்போதெல்லாம் பிரபலமாக இருக்கும் தலைப்பு டிஜிட்டல் மார்க்கெட்டிங். *டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்றால் என்ன? டிஜிட்டல் மார்க்கெட்டிங், ஆன்லைன் மார்க்கெட்டிங் என்றும் அழைக்கப்படுகிறது, இது இணையம் மற்றும் பிற டிஜிட்டல் தகவல்தொடர்புகளைப் பயன்படுத்தி சாத்தியமான வாடிக்கையாளர்களுடன் இணைக்க பிராண்டுகளை ஊக்குவிப்பதாகும். இது மின்னஞ்சல், சமூக ஊடகங்கள் மற்றும் வலை அடிப்படையிலான விளம்பரம் மட்டுமல்ல, மார்க்கெட்டிங் சேனலாக உரை மற்றும் மல்டிமீடியா செய்திகளையும் உள்ளடக்கியது. *டிஜிட்டல் மார்க்கெட்டிங் வகைகள் 1. சமூக ஊடக மார்க்கெட்டிங் தளங்கள் 2. செல்வாக்கு மார்க்கெட்டிங் 3. மின்னஞ்சல் மார்க்கெட்டிங் 4. உள்ளடக்க மார்க்கெட்டிங் 5. தேடுபொறி உகப்பாக்கம் (எஸ்சிஓ) மார்க்கெட்டிங் 6. கிளிக்கிற்கு பணம் செலுத்துதல் (PPC) 7. இணை மார்க்கெட்டிங் 8. மொபைல் மார்க்கெட்டிங் *டிஜிட்டல் மார்க்கெட்டிங் யார் கற்றுக்கொள்ள முடியும்? யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். கல்விக்கு அல்லது வேறு எதற்கும் அத்தகைய கட்டுப்பாடு இல்லை. கற்றல் திறன் மற்றும் ஆர்வத்தின் நோக்கம் மட்டுமே முக்கியம். நீங்கள் ஆர்வமாக இருந்தால், ந...

"அமெலியா ஏர்ஹார்ட்" சாதனை படைத்த ஒரு பெண்ணைப் பற்றிய UNTOLD STORY

அமெலியா ஏர்ஹார்ட் ஒரு முன்னோடி விமானி, அவரது அச்சமற்ற மனப்பான்மையும் சாதனை படைத்த சாதனைகளும் அவரை விமான வரலாற்றில் மிகவும் பிரபலமான நபர்களில் ஒருவராக ஆக்கியது. அட்லாண்டிக் பெருங்கடலைத் தனியாகப் பறக்கவிட்ட முதல் பெண்மணியாக, அவர் சமூக எதிர்பார்ப்புகளை மீறி, எதிர்கால தலைமுறை பெண் விமானிகளுக்கு வழி வகுத்தார். அவரது சாகச இயல்பு மற்றும் விமானத்தின் எல்லைகளைத் தாண்டுவதற்கான உறுதிப்பாடு உலகையே கவர்ந்தது. இருப்பினும், 1937 இல் உலகம் முழுவதும் பறக்கும் முயற்சியின் போது அவர் மர்மமான முறையில் காணாமல் போனது எல்லா காலத்திலும் தீர்க்கப்படாத மிகப்பெரிய மர்மங்களில் ஒன்றாக உள்ளது. ஏர்ஹார்ட்டின் மரபு உலகம் முழுவதும் கனவு காண்பவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் முன்னோடிகளை தொடர்ந்து ஊக்குவிக்கிறது. பயண பதிவுகள் & சாதனைகள் : அட்லாண்டிக் கடலைக் கடந்து பறந்த முதல் பெண்மணி (1928) – ஃப்ரெண்ட்ஷிப் கப்பலில் பயணித்த அவர், விமானம் மூலம் அட்லாண்டிக் கடற்பயணத்தை மேற்கொண்ட முதல் பெண்மணி ஆனார். அட்லாண்டிக் கடலைக் கடந்து தனியாகப் பறந்த முதல் பெண்மணி (1932) – அவர் நியூஃபவுண்ட்லேண்டிலிருந்து அயர்லாந்திற்கு 14 மணி நேரம் 56 ...