Skip to main content

கொரோனா மூன்றாவது அலை/ 3rd WAVE OF CORONA IN TAMIL

 


வணக்கம்,

 இன்றைய தினத்தில் நம் அனைவர் மனதிலும் கேள்வியாய் இருந்து கொண்டிருக்கும் ஒரு விஷயம் தான் கொரோனா மூன்றாவது அலை எப்படி இருக்கப்போகிறது என்று பயத்துடனும்

பல கேள்விகளுடன் நாம் எதிர்நோக்கி கொண்டிருக்கிறோம்.

 ஒன்றாவது மற்றும் இரண்டாவது அலைகளில் பல இழப்புகளை நாம் சந்தித்தாலும் மூன்றாவது அலை சிறுவர்களை அதிகமாக தாக்கும் என்று பரவலாக பேசப்பட்டு வரும் வதந்திகளால் மிகவும் பயந்து கொண்டுதான் இருக்கிறோம்.

 

1)முதலில் நம் நாட்டிற்கு மூன்றாவது அலை தாக்குதல் வருமா இல்லையா?

 *கண்டிப்பாக வரும் என்று யாரும் இதுவரை கூறவில்லை.*

 மூன்றாவது அலை தாக்காமல் இருக்க என்னென்ன செய்யலாம் அதை தவிர்க்க என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளலாம் என்பதைப் பற்றி தான் நாம் திரும்பத் திரும்ப பேசிக் கொண்டிருக்கிறோம்.

 இந்த நிமிடம் வரைக்கும் நம் நாடு மூன்றாவது அலையின் தாக்குதலுக்கு உட்படவில்லை என்பதே சமாதானத்திற்கு உரிய ஒன்றாகும்.

 மேலும் இந்த மூன்றாவது அலை குழந்தைகளைத் தாக்கும் என்பதற்கு எந்த

அதிகாரப்பூர்வமான அறிக்கையும் இல்லை. இந்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்றுதான் மருத்துவர்களும் கூறுகின்றனர்.

 மேலும் இதில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளலாம் என்றும் பட்டியலிட்டுள்ளனர்.

 

 நாம் அனைவரும் குழந்தைகள் உட்பட கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டால் மிகவும் நன்று.

1)சரியான மாஸ்க் அணிவது மிகவும் முக்கியமாகும்.

2)வெளியே சென்று வந்தால் உடனடியாக கை கால்களை சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.

3)கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

4)குழந்தைகளை வெளியே கூட்டி செல்வதை தவிர்க்க வேண்டும்.

5)நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள சத்தான உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும்.

6)முக்கியமாக சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும்.

7)மிகவும் முக்கியமான ஒன்று நம் மனநிலையை சீராக வைத்துக் கொள்ள வேண்டும்.

8)கடைசியாக நாம் எல்லோரும் எல்லாருக்காகவும் கடவுளை வேண்டிக் கொள்ள வேண்டும்.

 மூன்றாவது அலை பற்றிய தேவையில்லாத வதந்திகளை நம்பாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி நம்பிக்கையுடன் இருந்தால் மூன்றாவது அலை நம் நாட்டிற்கு வராமல் நம்மால் தடுக்க முடியும்.

 *வரும் வரும் என்று கூறாமல் 

வராமல் காப்போம் என்று உறுதி கொள்வோம்.*


YOUTUBE    INSTAGARAM


மீண்டும் அடுத்த பதிவில் உங்களை சந்திக்கிறேன்.

 

உங்கள்

 ஐலின் .

 

Comments

Post a Comment